Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 100% நிரம்பும் திரையரங்குகள்… அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் உள்ள திரையரங்குகள் அரசு விதியை மீறி 100% பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 50 சதவீத இருக்கையுடன் திரையரங்குகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு பல நடிகர்கள் 100 சதவித இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததால், தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசை மீண்டும் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

ஆனால் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிடப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதனால் சென்னையில் உள்ள திரையரங்குகள் அரசு விதியை மீறி 100% பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக சமூக ஆர்வலர் தேவராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.

Categories

Tech |