சென்னையில் வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலையை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
மேடவாக்கம் முதல் சோளிங்கநல்லூர் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் காமாட்சி மருத்துவமனை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. தாம்பரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரங்கராஜபுரம், மேடலி சுரங்கப்பாதையில் போக்குவரத்துக்கு இரண்டாவது நாளாக இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் இரண்டாவது அவின்யூ சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
கேகே நகர், ராஜமன்னார் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் கேசவர்தினி சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக செல்லும் வாகனங்கள் ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைப்பா சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.