சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம் அமைவதாக மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், சென்னையில் தற்போது உள்ள விமான நிலையத்திற்கு இட நெருக்கடி உள்ளது. சென்னையில் அமைய உள்ள புதிய விமான நிலையம் ஆணையம் நடத்திய சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் மாநில அரசு தேர்வு செய்துள்ளதாகவும் இதற்காக ரூ.2,467 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே சென்னையில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது உறுதியாகி உள்ளது.
Categories
சென்னையில் ரூ.2,467 கோடியில் புதிய விமான நிலையம்…. மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!
