Categories
செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 24 பேர் கொரோனவால் உயிரிழப்பு !!!..

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா புதிய வேகம் எடுத்து வருகிறது.தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.பலி எண்ணிக்கையும் 1000 ஐ   நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று  ஆயிரக்கணக்கான மக்களின் உடல்களுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. அதன் ஓய்வு  எப்போது முடிவுக்கு வரும் என்று இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில்  சென்னையில் கொரோனாவால்  மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன .

இதில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 24 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக  கூறப்படுகிறது.  சென்னை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார் மருத்துவமனையில் – தலா 7 பேர், ஸ்டான்லி – 5 பேர்,  கீழ்ப்பாக்கம் – 3 பேர்,  தனியார் மருத்துவமனைகளில் – 2 பேர் என மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளன .

Categories

Tech |