Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முடங்கிய விமான சேவை… வெளியான திடீர் அறிவிப்பு… பயணிகள் கவலை…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஷிப்லி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா மற்றும் கண்ணுர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த 12 நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருகின்ற 12 விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காலநிலைக்கு ஏற்றவாறு கூடுதல் விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால் விமான சேவை பற்றிய அறிவிப்புகளை தெரிந்துகொள்வதற்கு பயணிகள் அனைவரும் தங்கள் விமான நிலையங்களுடன் தொடர்பு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |