Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு….. அரசு எடுக்கப் போகும் முடிவு?….. அச்சத்தில் மக்கள்….!!!!

சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகுமா? என அச்சம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 699 அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 60 பேருக்கும், கோவையில் 23 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: ” கொரோனா அதிகரிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய தொற்று பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில் இன்று 400-ஐ  தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு  அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் தொற்று பரவல் மேலும் அதிகமாக இருக்கும். சென்னையில் கொரோனா அதிகரிக்கும் மண்டலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தி உள்ளோம். சென்னையில் தொற்று பரவாமல் பாதுகாத்துக் கொண்டால் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க முடியும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனிடையே தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்” என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |