சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கும் ஆலோசனை வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் அமைப்பின் தலைமை திட்டமிடல் அதிகாரி, காலநிலை பின்னடைவு நடைமுறை உலக பல நிறுவனத்தின் இயக்குனர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.சென்னையில் எங்கெல்லாம் மழைநீர் தேங்குகிறது,அதனை அகற்றும் வழி என்ன என்பது பற்றி வல்லுநர் குழு ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.