Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மாயமான கொரோனா நோயாளி – ஐகோர்ட் சரமாரி கேள்வி …!!

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்வர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காணாமல் போனவரால் பலருக்கும் தொற்று ஏற்படுமோ என்ற அச்சமும் எழுந்த நிலையில், காணாமல் போன நோயாளியின் மகன் துளசிதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சரமாரியான கேள்வி எழுப்பினர்.

கொரோனா தொற்று உறுதியானவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் ? எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் ? கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் பதிவு பராமரிக்கப்படுகிறதா ?கொரோனா நோயாளிகளை கையாளுவதில் சுகாதாரத்துறை-  மாநகராட்சி இடையே ஒருங்கிணைப்பு உள்ளதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்க்கு மாநகராட்சி தரப்பில், சுகாதாரத் துறையுடன் முழு ஒருங்கிணைப்பு உள்ளது என்றும், காணாமல் போன கொரோனா நோயாளி தேடப்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Categories

Tech |