Categories
மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 6 மேம்பாலங்கள்… அமைச்சர் கே.என் நேரு அதிரடி அறிவிப்பு…!!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து கே என் நேரு வெளியிட்ட அறிவிப்புகள்,சென்னை மாநகராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சின்ன நோலம்பூர் மற்றும் ஓம் சக்தி நகர் போன்ற இடங்களில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 120 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது.

கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2b ரயில்வே நந்திக்கடலில் ரூபாய் 150 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூபாய் 98 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். மேலும் ஜீவன் நகரில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் மற்றும் கீழ்ப்பாக்கம் தோட்டத்தில் உள்ள ஆஸ்பரின் சாலையில் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு பாலங்கள் அமைக்கப்படுகிறது. சென்னை மாநகரில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்காக கொசஸ்தலை ஆறு வழி நிலப்பகுதியில் ரூபாய் 3720 கோடி மதிப்பீட்டிலும் கோவளம் வடி  நிலப்பகுதியில் ரூபாய் ஆயிரத்து 714 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஏனைய பகுதிகளில் பல்வேறு நிதி ஆதாரங்களை ஒருங்கிணைத்து மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக ரூபாய் 290 கோடி மதிப்பில் புதிதாய் மழைநீர் கால்வாய்கள் அமைத்தல் மற்றும் தற்போது இருக்கின்ற மழைநீர் கால்வாய்களை மேம்படுத்தும் பணிகள் தமிழக அரசின் வெள்ள தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்படும் சிறப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி கட்டிடங்களை மேம்படுத்துதல் மற்றும் மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி முதலீட்டாளர்கள் வாங்குதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

மேலும் சென்னை மாநகராட்சியில் மூன்று இடங்களில் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் நாய்களுக்கு உண்டான எரியட்டும் மயான வசதி ரூபாய் 20 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 50 எண்ணிக்கையிலான விளையாட்டு திடல்கள் புதிதாக அமைத்தல் மற்றும் மேம்படுத்தும் பணி ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலங்கள் இன் கீழ் பகுதியில் செயற்கை நீரூற்று மற்றும் வண்ண விளக்குகள் அமைத்து மற்றும் பசுமையாக்கி அழகுபடுத்தும் பணி ரூபாய் 25 கோடியில் செயல்படுத்தப்படும்.

மேலும்  கடற்கரையில் மர நடைபாதை சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுதிறனாளிகளுக்கு நிரந்தர நடை பாதை அமைக்கப்பட உள்ள போது பெசன்ட் நகரில் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் மர நடை பாதை அமைக்கப்படும். மேலும் கோடம்பாக்கம் மற்றும் அடையாறு பகுதிகளில் தற்போது குடிநீர் விநியோக அமைப்பு என்பது 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 1958 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |