Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பயங்கரம்….. தொழிலதிபர் உடலை பையில் கட்டி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திரு.பாஸ்கர். கட்டுமான தொழிலதிபரான இவரை காணவில்லை என அவரது மகன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நெற்குன்றம் கூவம் நதியோரத்தில் பிளாஸ்டிக் பையில்அடையாளம் தெரியாத ஆணின் சடலம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் ஒருவரை 10 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பையில் கட்டி தெருவோரம் வீசி சென்றது தெரியவந்துள்ளது.

Categories

Tech |