Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் …!!

சென்னையில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 999 ரூபாய் செலுத்தி சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் புதிய வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னையில் பொதுமக்களிடம் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் ஷேரிங் திட்டம் ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சி தற்போது வாடகை அடிப்படையில் சைக்கிளை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வாடகை அடிப்படையில் கைக்கிளை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 7 நாட்களுக்கு 299 ரூபாயும், 15 நாட்களுக்கு 599 ரூபாயும், 30 நாட்களுக்கு 999 ரூபாயும், கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் சேர விரும்புவோர் தங்களது பெயரை முன்பதிவு செய்திடவும் மாநகராட்சி தரப்பில் வீட்டிற்கே வந்து சைக்கிள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தேர்வு செய்த காலம் முடிந்தவுடன் மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று சைக்கிளை பெற்றுக் கொள்வார்கள் என்றும் இத்திட்டத்திற்காக சென்னையில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 33 இடங்களில் சைக்கிள் நிலையங்களில் 160 சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |