Categories
மாநில செய்திகள்

சென்னையில் சைக்கிள் பேரணி….. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பங்கேற்பு…!!!!

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் தேசிய நல்வாழ்வு இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிள் பேரணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்து அந்தப் பேரணியில் அவர் கலந்து கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த சைக்கிள் பயணத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் ஓமந்தூர் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேர், கிண்டியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் 50 பேர் 100க்கு மேற்பட்ட இதில் கலந்துகொண்டுள்ளனர்.  மேலும் சைக்கிள் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் விழிப்புணர்வு வாசகங்களை முதுகில் ஏந்தியவாறு சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |