Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கோர விபத்து…. தலை குப்புற கவிழ்ந்த கார்…. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் மரணம்….!!!!

சென்னையை அடுத்த வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ்பாபு, சுரேஷ் பாபு ஆகிய இரண்டு சகோதரர்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் இயந்திரம் பழுதானதால் தங்களது சொந்த ஊரிலிருந்து மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்கு திரும்பினர்.

அந்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்த நிலையில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த ரமேஷ் பாபு,சுரேஷ்பாபு மற்றும் சுதாகர் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |