Categories
மாநில செய்திகள்

சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னை மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால்,மாமல்லபுரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. திருவான்மியூர், தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கவும், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண மக்கள் அதிகளவு வருவார்கள் என்பதால் அதற்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். மக்களின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக உள்ளோம். வார இறுதி நாட்களில் போட்டியை காண செல்ல வாய்ப்பு இருப்பதால் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டு வருகிறோம். பொதுமக்கள் பயன்பாட்டை பொறுத்து தான் பேருந்து  சேவையை அதிகரிக்க முடியும். தற்போது மாமல்லபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் ஆய்வு செய்யப்படுகிறது என கூறிஉள்ளார்.

Categories

Tech |