Categories
மாநில செய்திகள்

சென்னையில் குறைந்த தேர்ச்சி விகிதம்….. மேயர் ப்ரியா எடுத்த அதிரடி முடிவு…..!!!!

சென்னையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு 20 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டில் ஒரு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |