மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்ற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில் வாடகைக்கு எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன .
சென்னை மெட்ரோ நிலையமும் பிளை என்னும் தனியார் நிறுவனமும் சேர்ந்து முதன் முறையாக ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில் வாடகை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் .முதற்கட்டமாக 6 பைக்குகள் மட்டுமே பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிலையில் முழுக்க முழுக்க செயலிகள் மூலம் மட்டுமே பைக்குளை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .இதை இயக்க விரும்புவோர் கூகுளில் fly என்ற செயலியை தரவிறக்க வேண்டும் அதில் விவரங்களை பதிவு செய்தவுடன் தங்கள் புகைப் படத்தை பதிவு செய்ய வேண்டும் .
பின்னர் ஓட்டுநர் உரிமத்தின் இரு பக்கங்களையும் ஸ்கேன் செய்தவுடன் செல்போனில் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல் வருகிறது அதை வாகனத்தில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்தால் போதும் அந்த நிமிடம் முதல் வாகனம் செயல்படத்துவங்கிவிடும்.அப்போது முதல் 1நிமிடத்திற்கு 1ரூபாய் வீதம் கட்டணம் கணக்கிடப்படும் .பின் நாம் விரும்பும் இடத்திற்கு சென்று End என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து விட்டால் போதும் .