Categories
மாநில செய்திகள்

சென்னையில் குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து…. ரூ.1,00,000 நிவாரணம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

சென்னை திருவொற்றியூர் கிராம தெருவில் அரிவாக்குளம்  குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அவரவர் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறிய சற்று நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் குடியிருப்பில் திடீரென விரிசல் ஏற்பட்டதாக அங்கு வசித்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த குடியிருப்பு கட்டிட விபத்தில் பாதிப்படைந்த 24 குடும்பங்களுக்கு தலா ரூ.1,00,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |