சென்னை மாவட்ட வருவாய் அலகில் ஒன்பது வருவாய் வட்டங்களில் காலியாக இருகின்ற 12 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையிலும் தகுதியான நபர்களின் உரிய கல்வி தகுதி மற்றும் படித்தல், எழுதுதல், திறனறிவு தேர்வு மற்றும் தேர்வு போன்றவைகளின் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதனால் தகுதியுடைய நபர்கள் அக்டோபர் 10 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மாலை 5:45 மணி வரை இளையதனம் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இதற்கு இருப்பிட சான்று, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பள்ளி மாற்று சான்றிதழ், கல்வி தகுதி சான்று, ஒலிநகல்கள், பிறப்பு சான்று, ஆதரவற்ற விதவையாக இருந்தால் அதற்கான சான்று, மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை நகல், முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அடையாள அட்டை நகல் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் நகல் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மேலும் ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.
சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர மற்ற வட்டங்களை சேர்ந்தவர்கள் இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. சம்பளம் மாதம் 11 ஆயிரம் முதல் 35,100 வரை வயது வரம்பு 1.7.2022 அன்று 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். மேலும் பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37 தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும் மேலும் விண்ணப்பதாரரின் கணவரோ அல்லது மனைவியோ உயிருடன் இருக்கும் போது வேறு திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது. இதனை அடுத்து விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் சான்று பொமிட்டன் நகல்கள் போன்றவை இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்திற்காக எந்தவித சிபாரிசும் நாடகூடாதுஎந்த வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு இணையதளம் வருவாய் நிர்வாக துறையின் இணையதளம் மற்றும் சென்னை மாவட்ட இணையதளங்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். https://www.tn.gov.in,https://cra.tn.gov.in,https://Chennai.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு தேர்வு முறை, இனசுழற்சி முறை பற்றிய இதர விவரங்களை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதள முகவரியில் தனித்தனியாக இணைப்புகளை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.