தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இதனிடையே சென்னையில் கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் நிலையில் தமிழக முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்த போதும் மின்விநியோகத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் உடனே மின்விநியோகம் செய்யப்பட்டு விட்டது. இதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.