சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். அதனால் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவையும் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் ஒரு சில மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அச்சம் கொள்கின்றனர். அதனால் தினந்தோறும் 200 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இது கொரோனா மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.அதனால் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக தி நகர் மற்றும் காசிமேடு மீன் மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வார இறுதி நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை வரவும், தேவைப்பட்டால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.