Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் 32 ஆய்வாளா்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

சென்னை பெருநகர காவல்துறையில் 32 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும் விருப்பத்தின் அடிப்படையிலும் பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் ஆய்வாளா்கள் அவ்வப்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். அதன் ஒரு பகுதியாக 32 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறையின் ஆணையா் சங்கா் ஜிவால் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

இதில் முக்கியமாக கொருக்குப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளா் எம்.தவமணி வண்ணாரப்பேட்டைக்கும், தரமணி காவல் ஆய்வாளா் ராமலிங்கம் சாஸ்திரி நகா் குற்றப்பிரிவுக்கும், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் கே.புகழேந்தி நீலாங்கரை குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா் இசக்கிப் பாண்டி எழும்பூா் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |