சென்னையில் இன்று மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வியாசர்பாடி பகுதி, ஆவடி பாண்டேஸ்வரம் பகுதி, திருமுல்லைவாயில் பகுதி, புழல் பகுதி, ஈஞ்சம்பாக்கம் பகுதி, செங்குன்றம் பகுதி, ஆவடி பகுதி, ஐசிஎப் பகுதி, மந்தவெளி பகுதி, அடையார் பிரிவு மற்றும் அம்பத்தூர் பகுதி, அயபாக்கம் பகுதி, செம்பியம் பகுதி, கொளத்தூர் பகுதி, தண்டையார்பேட்டை, போரூர் மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் ஒரு மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வினியோகம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Categories
சென்னையில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்…. இதோ லிஸ்ட்….!!!!
