தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு மின்தடை இருக்கும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். மேலும் முன்னறிவிப்பின்றி மின்நிறுத்தம் இருக்காது என்றும் எத்தனை மணிக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்பது முன்கூட்டியே அப்பகுதி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், மணலி புதுநகர், மேலூர் பகுதி, அடையார் பெசன்ட், அடையார் சாஸ்திரி நகர், வேளச்சேரி மேற்கு, மையம், வேளச்சேரி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.