சென்னையில் இன்று அதிகாலை ரித்தீஸ் என்ற பள்ளி மாணவன் சைக்கிளில் சென்றுள்ளான். அப்போது அவரின் சைக்கிளை மறித்து முகமூடி கொள்ளையர்கள் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் வண்டியில் துரத்தி வந்து செல்போனை கேட்டுள்ளனர். அப்போது மாணவன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடியுள்ளார்.
அதன்பிறகு தப்பித்து ஓடும் போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தி உள்ளனர். பக்கத்தில் இருந்த டீக்கடையில் தான் தஞ்சம் புகுந்ததாகவும், கொள்ளையர்கள் வடமாநிலத்தவரை போல இருந்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் அதிகாலை நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.