சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். ஏற்கனவே இவர் தனுஷின் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
It was great pleasure to meet the powerhouse of talent Dhanush sir, who has made his mark across world cinema 🔥@dhanushkraja pic.twitter.com/M6STGK4ceZ
— Kamala Cinemas (@kamala_cinemas) August 27, 2021
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், நித்யா மேனன் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
With Actress Nithya Menen ❤️@MenenNithya pic.twitter.com/yDNXm3yFm0
— Kamala Cinemas (@kamala_cinemas) August 27, 2021