Categories
மாநில செய்திகள்

சென்னையின் தற்போதைய போக்குவரத்து நிலவரம் என்ன…? காவல்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் போக்குவரத்து நிலவரம் குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்டஸ் புயலை கருத்தில் கொண்டு காந்தி சிலைக்கும் நேப்பியர் பாலத்திற்கும் இடையேயான காமராஜர் சிலை வழியாக இந்த சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர மற்ற போக்குவரத்துக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை.

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் 73 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் 24 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் 24 மரங்களும் சாலைகளில் விழுந்துள்ளது. இந்நிலையில் சாலைகளில் விழுந்த 72 மரங்களை சென்னை பெருநகர காவல் துறை ஒருங்கிணைப்புடன் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் மீதமுள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து சாலைகளில் 5 மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதில் 3 மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 2 மின் கம்பங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |