பிரேசில் ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ மக்களிடம் கொரோனாவால் ஏற்படும் இறப்புகளை நினைத்து அழுவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பெரும் இழப்புகளை நாம் நாள்தோறும் கண்டு வருகிறோம். இந்நிலையில் பிரேசிலில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவலால் இறப்புகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மட்டும் 75,102 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் மேலும் 1699 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தும் உள்ளனர் . இதனால் மக்கள் அனைவரும் அரசுக்கு எதிராக பல கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
இதனிடையே பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போலல்சனோரா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியதில்,’இதைக் கண்டு எவ்வளவு நாள் தான் நீங்கள் அழுது கொண்டே இருக்கப் போகிறீர்கள். நாட்டில் ஏற்படும் இழப்புகளுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன், இதனை விரைவில் தீர்வு காண முயற்சி செய்வோம்’ என்றும் அவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும் ,பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
மேலும் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று பிரேசிலில் அதிகமாக பரவி வருவதாகவும் அதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஸ்பெயின் ,பிரான்ஸ் ,ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது.