Categories
மதுரை மாவட்ட செய்திகள்

செஞ்ச தப்பை உணர்ந்து திருந்திய வாலிபர்….  ஜாமீனில் வந்ததும்….. ஏமாற்றிய பெண்ணுக்கு தாலி…..!!!!

மதுரை மாவட்டம் கோட்டப்பட்டியை சேர்ந்த அழகுராஜாவும் மணப்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அழகுராஜா, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்க அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2019 ஆம் ஆண்டு காவல்துறையினர் அழகுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்றுவிட்டார். இவர் வெளிநாடு சென்றதால் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊர் திரும்பி வந்த அழகுராஜா லுக்அவுட் நோட்டீஸ் காரணமாக மீண்டும் மேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  தற்போது இந்த வழக்கில் ஜாமினில் வெளிவந்த அழகுராஜா அருகில் இருந்த காளியம்மன் கோயிலில் வைத்து தான் ஏமாற்றிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .

Categories

Tech |