Categories
மாவட்ட செய்திகள்

செஞ்சி கல்வி மாவட்டம்… “ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கு பயிற்சி முகாம்”…!!!

செஞ்சி கல்வி மாவட்டத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

செஞ்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் இருக்கும் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார்.

மேலும் அவரே முகாமை தொடங்கி வைத்து ஜூனியர் ரெட் கிராஸ் விழுப்புரம் மாவட்ட முன்னாள் கன்வீனர் முரளிதரன், விழுப்புரம் கல்வி மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை, பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் மாநில பயிற்றுனர்களான தண்டபாணி, சின்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரை மற்றும் பயிற்சியை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை செஞ்சி கல்வி மாவட்ட கன்வீனர் ஒருங்கிணைத்தார்.

Categories

Tech |