Categories
விழுப்புரம்

“செஞ்சியில் திடீரென பெய்த மழை”… சேதமடைந்த ஆயிரம் நெல் மூட்டைகள்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் செஞ்சியில் உள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் ஒரு மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழை பெய்யும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் பத்து நிமிடத்திலேயே நின்றுவிட்டது. இந்த மழையால் சாலையில் மழைநீர் வழிந்தோடியதை தொடர்ந்து பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் நனைந்தபடி சென்றார்கள்.

இதைப்போலவே செஞ்சியில் நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் மழை பெய்தது. இது சுமார் அரை மணி நேரம் நீடித்ததால் செஞ்சியில் உள்ள விற்பனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. இந்த நெல் மூட்டைகளானது வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்களாகும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |