Categories
தேசிய செய்திகள்

செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கிலம் கட்டாயம்… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் வாங்கும் செக்யூரிட்டி வேலைக்கு ஆங்கில எழுத்துக்கள் தெரிய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் விவசாயம் செய்ய முடியாதவர்கள் வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் செக்யூரிட்டிகள் ஆக பல்வேறு நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு செக்யூரிட்டி நிறுவனங்கள் சம்பளமாக சொற்பத் தொகையே வழங்குகின்றன. அதற்கு ஏற்றபடி 50 வயதை கடந்தவர்கள் தான் பெரும்பாலும் இந்த வேலையில் உள்ளனர். சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகபட்சமாக 10 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் செக்யூரிட்டி பணிகளுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதில் குறைந்தபட்ச சம்பளம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. செக்யூரிட்டியாக பணிபுரிய 160 சென்டி மீட்டர் உயரமும், அதற்கு ஏற்ற எடை, 80 செமீ மார்பளவு இருக்க வேண்டும். நல்ல கண் பார்வை, நிறங்களை அடையாளம் காணும் திறன் கட்டாயம் இருக்க வேண்டும். செக்யூரிட்டி களுக்கு குறைந்த பட்சம் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்களை அடையாளம் காணும் திறன் இருக்க வேண்டும்.

மேலும் உடல் தகுதி, சொத்துக்கள் குறித்த அறிவு, தீயணைப்பு பயிற்சி, கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி மற்றும் அடையாள அட்டைகள் சரிபார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க வேண்டும். முன்னாள் போலீசாருக்கு 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 16 மணி நேர கலைப்பயிற்சி அளிக்க வேண்டும். புதிதாக சேர்பவர்களுக்கு 100 மணி நேர வகுப்பறை பயிற்சி மற்றும் 60 மணி நேர கள பயிற்சி அளிக்க வேண்டும். வெடிகுண்டுகளை அடையாளம் காணும் பயிற்சி, முதலுதவி, அவசர கால நிர்வாகம் மற்றும் போலீஸ் அதிகாரிகளை பதவியேற்க அடையாளம் காணும் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |