செஃப் தாமுவின் மகளுடன் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த தர்ஷா குப்தா, சிவாங்கி, பவித்ரா, புகழ், அஸ்வின் உள்ளிட்ட பலருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இரண்டாவது சீசன் மிகப்பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து மூன்றாவது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான செப் தாமு அளித்த பேட்டியில் ஆகஸ்ட் மாதம் குக் வித் கோமாளி 3 தொடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் செப் தாமுவின் மகளுடன் சிவாங்கி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.