புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் அடியோடு சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் மத்தியில் தற்போது கோடை மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஆண்டிக்கோன் பட்டியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழைத்தார்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழைத்தார்கள் முழுவதும் அடியோடு சாய்ந்துள்ளன.
இதனால் விவசாயிகள் 12 மாதத்திற்கு மேலாக உரமீட்டு, நீர் பாய்ச்சி வளர்த்த வாழை மரங்கள் முழுவதும் சரிந்து கிழே விழுந்ததால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று விவசாயிகள் பெரும் கவலைக்கு உள்ளாகினார்கள்.