Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா மற்றும் ஞானவேல் மீது வழக்குப்பதிவு…. “ஜெய் பீம் படத்தை விடாத பிரச்சனைகள்”……..!!!!

இயக்குனர் ஞானவேல் மற்றும் சூர்யா மீது சென்னை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. சில வருடங்களாகவே தோல்வியை சந்தித்து வந்த சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பினார். இதை அடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.

இந்த நிலையில் பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் சூர்யா நடிக்கின்றதையடுத்து படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பானது தொடங்கியுள்ளது. சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் பாலா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்தவுடன் சுதாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மானும் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.

இந்த நிலையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் சூர்யா நடித்து தயாரித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இது 20 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இது சில சர்ச்சைகளில் சிக்கியது. குறிப்பிட்ட ஒரு கட்சி இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் படம் வெளியாகி பல மாதங்களாகியும் சர்ச்சை விடாது படத்தை துரத்திக் கொண்டிருக்கின்றது. ஜெய் பீம் படத்தின் கதை எங்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் எனவும் அதை திருடி சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஜெய் பீம் படத்தை எடுத்திருப்பதாகவும் குளஞ்சியப்பன் என்பவர் சென்னை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார். இந்த வழக்கானது வருகின்ற ஜூலை 15ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கின்றது. இது தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |