சுதா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. சில வருடங்களாகவே தோல்வியை சந்தித்து வந்த சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பினார். இதை அடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.
இந்த நிலையில் பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் சூர்யா நடிக்கின்றதையடுத்து படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பானது தொடங்கியுள்ளது. சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் பாலா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்தவுடன் சுதாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் துல்கர் சல்மானும் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.