Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவை இப்படி மிரட்டுறாங்க… “எங்க போனாங்க நடிகர் சங்கமும்..? தயாரிப்பாளர் சங்கமும்”..? அருணன் கேள்வி…!!!

நடிகர் சூர்யாவை மிரட்டி வருகின்றனர். இதனை உச்ச நடிகர்கள் பார்த்துக்கொண்டு ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று சிபிஎம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஒரு கோஷ்டி சூர்யாவை அடிக்க சொல்கிறது. அவரது படத்தை தடுக்கின்றன.ர் நடிகர் சங்கம் எங்கே? சூப்பர் ஸ்டாரும், உலக நாயகனும் எங்கே? போனார்கள் என்று பேராசிரியர் அருணன் கேள்வி எழுப்பினார். ஜெய்பீம் பட விவகாரம் நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வருகின்றது. இப்படத்தில் இடம் பெற்றிருந்த காலண்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதனால்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு இது தொடர்பாக பல்வேறு கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது தியேட்டர்களில் படம் திரையிடுவது வன்னிய சமூகத்தின் தடுத்து நிறுத்தினர்.

அன்புமணி அறிக்கைக்கு சூர்யாவும் பதில் அளித்திருந்தார். அதற்கிடையில் சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் பணம் தருவதாக பாமக பிரமுகர் ஒருவர் அறிவிக்கவே இந்த விஷயம் உச்ச கட்டத்திற்கு சென்று விட்டது. இதுவரை திரைத்துறை சார்பில் யாருமே சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளது. சூர்யாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே இதுவரை பேசி வருகின்றனர். அதிமுக, திமுக இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. அமைதியாக தான் உள்ளது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி பேராசிரியர் அருணன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் என்று கோஷ்டி அறிவிக்கிறது.  அவரது படத்தை தடுத்து நிறுத்துகிறது. நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்கின்றன. சூப்பர் ஸ்டார்கள், உலகநாயகன், தலைவர்கள், தளபதிகள் எங்கே? இன்று சூர்யாவுக்கு நாளை இவர்களுக்கு… என்று அதில் பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |