Categories
சினிமா

“சூர்யாவை ஃபர்ஸ்ட் லவ் பண்ணது நான் தான்”…. புது குண்டை தூக்கி போட்ட டான்ஸ் மாஸ்டர்….!!!

தமிழ் சினிமா உலகில் அற்புதமான காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தெலுங்கின் முன்னணி பெண் நடன இயக்குனரான பாபி, சூர்யாவை காதலித்ததாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருந்ததாவது, “பள்ளியில் படிக்கும்போது எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும். அவரை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா.? என நினைப்பேன். இந்நிலையில் தான் நான் பிருந்தா மாஸ்டரிடம் அசிஸ்டன்ட் ஆக சேர்ந்தேன்.

அப்போது காக்க காக்க படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நான் சூர்யாவுக்கு உங்களை “லவ் பண்ணுறேன்” என லெட்டர் எழுதி கொடுத்தேன். அதனை பார்த்த சூர்யா அந்த லெட்டரை செட்டில் இருந்த அனைவரிடமும் காண்பித்து விட்டார். அதோடு ‘நான் ஜோதிகாவை தான் லவ் பண்றேன்’ என என்னிடம் கூறினார். அதற்கு ஜோதிகா ‘என்ன பாபி கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருக்கக் கூடாதா.?” எனக் கூறினார். நான் அதற்கு , ‘நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ஜோதிகா நான் சூர்யாவை லவ் பண்றேன்’ என கூறினேன் இதனைக் கேட்டு செட்டில் இருந்த அனைவரும் பயங்கரமாக சிரித்தனர்.” என அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் தற்போது அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Categories

Tech |