சமந்தா, சூர்யாவுக்கு வலைவீசி வருவதாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் அனைவரின் கவனத்தையும் பெற்றது. இவர் நடிகர் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சென்ற வருடம் அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து கெரியரில் இருவரும் கவனம் செலுத்தி வருகின்றார்கள்.
இந்தநிலையில் பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது விவாகரத்தான சமந்தா நடிகர் சூர்யாவுக்கு வலை வீசுவதாக கூறியிருக்கின்றார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சமந்தா தான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது காக்க காக்க திரைப்படம் வெளியானதாகவும் அப்போதிருந்தே சூர்யாவின் தீவிர ரசிகை ஆகிவிட்டதாக கூறியிருந்தார். அதை மேற்கோள்காட்டி பயில்வான் ரங்கநாதன் ஒருவேளை அப்படி இருக்குமோ என குறிப்பிட்டு சூர்யா ரொம்ப நல்லவர் என கூறியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகைனு சொன்னது குத்தமா என கேட்டு வருகின்றனர்.