Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் 25 வருட திரைப்பயணம்”….. பெருமிதமாக கார்த்தி ட்விட்….!!!!!!

சூர்யா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்களானதையொட்டி தம்பி நடிகர் கார்த்திக் ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் சூர்யா. இவர் பல வெற்றி திரைப்படங்களை தந்தாலும் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். பின் சூரரைப்போற்று திரைப்படம் அவரை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார்.

இந்த நிலையில் திரைத்துறையில் சூர்யா அடியெடுத்து வைத்து 25 வருடங்கள் நிறைவடைந்து இருக்கின்றது. இதற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி தனது அண்ணன் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தனது ஒவ்வொரு மைனஸையும் தனது மிகப் பெரிய பிளஸ் ஆக மாற்றுவதற்காக இரவும் பகலும் உழைத்தவர். தனது சொந்த சாதனைகளை மிஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு நபராக அவர் ஏற்கனவே தனது தாராளமான இதயத்தை இன்னும் பெரிதாக்கினார். மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார். அது என் அண்ணன் என குறிப்பிட்டிருக்கின்றார்.

 

Categories

Tech |