எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பார்த்துவிட்டு கூல் சுரேஷ் செய்த விஷயம் ரசிகர்களிடையே விமர்சனமாகியுள்ளன.
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் கூல் சுரேஷ். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார். முன்னணி நடிகர்களின் எந்த \ திரைப்படம் திரைக்கு வந்தாலும் தனது நண்பர்களுடன் படத்தை பார்த்து விட்டு கமெண்ட் சொல்லிவிடுவார். இவர் சினிமா துறையில் இருப்பதால் பெரும்பாலும் பாஸ்டிவான கமெண்ட்டுகளையே கூறுவார்.
இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி உள்ள நிலையில் படத்தை பார்த்துவிட்டு வெந்து தணிந்தது காடு.. சூர்யா சாருக்கு வணக்கத்தப்போடு என்று கூறினார். இதற்கு ரசிகர்கள் நீங்கள் பார்த்தது எதற்கும் துணிந்தவனா அல்லது வெந்து தணிந்தது காடா என்று விமர்சனம் செய்து வருகின்றனர். சிலரோ எல்லா திரைப்படங்களையும் பாராட்டி வருகின்றார் யாராவது அவருக்கு சான்ஸ் கொடுங்கப்பா என்று கூறுகின்றனர்.