தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருவார் வெற்றிமாறன். இவர் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். கடந்த ஆண்டு வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்றது.
விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலின் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் படத்தின் சண்டை காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஒரு தீவிரமான ஆக்ஷன் காட்சிகளை சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் வடிவமைத்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கான ஒரு கட்டப் படப்பிடிப்பு நிறைவு என்று குறிப்பிடப்பட்டு சில புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு உள்ளது.