Categories
சினிமா தமிழ் சினிமா

“சூரி-நிவின்பாலி கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா….?” அப்ப இந்த தேதி வரைக்கும் காத்திருங்க…!!!!!!

சூரி-நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராம் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்கின்றார்.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடெக்ஷன் தயாரிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க படப்பிடிப்பானது சென்னை, தனுஷ்கோடி, வண்டிப்பெரியார், வாகமன் உள்ளிட்ட கேரளாவை ஒட்டி உள்ள இடங்களில் நடந்தது. தற்போது தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்ற நிலையில் இத்திரைப்படத்தின் தலைப்பு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன் படி வருகின்ற அக்டோபர் 11-ம் தேதி மதியம் இத்திரைப்படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Categories

Tech |