Categories
தேசிய செய்திகள்

சூரிய கிரகணம்…. அக்டோபர் 25 அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அறிவிப்பு….!!!

சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும்.

இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கிரகணம் மேற்கு அடிவானில் புலப்படும். மேலும் பகுதி சூரிய கிரகணம் என்பதால் முழுமையாக சூரியன் மறைந்து விடாது.மேற்கு அடிவானத்தை தெளிவாக காணக்கூடிய பகுதியில் இன்று நோக்கினால் மாலை ஐந்து மணிக்கு கிரகணம் தொடங்குவதை காண முடியும். ஒரு ஆப்பிள் கடித்ததை போல சூரியனின் முகத்தில் ஒரு பகுதியில் சற்று நிழல் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்வதை முன்னிட்டு ஒடிசாவில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணம் மத நம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது என்பதால் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது . அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கிரகணத்தின் போது வெறும் கண்களால் சூரியனை பார்க்க கூடாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |