Categories
மாநில செய்திகள்

சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாதா….? மூட நம்பிக்கையை ஒழிக்க சூப்பர் ஏற்பாடு….!!!!

ஒவ்வொரு ஆண்டுமே இரண்டு முறை சூரிய கிரகணமும், 2 முறை சந்திர கிரகணமும் ஏற்படும். ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் சூரிய கிரகணம் முதல் முறையாக ஏற்பட்டுவிட்டது. தற்பொழுது, இரண்டாவது முறை ஐப்பசி மாதம் சூரிய கிரகணம் தோன்ற இருக்கிறது.

இந்த சூரிய கிரகணத்தின் உச்சக்கட்ட நிலையை ரஷியாவில் 4:39 மணியளவில் காணலாம். இந்தியாவை பொறுத்தவரை இந்த சூரிய கிரகணம் மாலை 4:29 மணிக்கு தென்படும். சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். இந்தியாவில் மாலை 5:30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தையும் கண்டுகளிக்க முடியும்.

இந்நிலையில் இன்று இதுகுறித்து மக்கள் மத்தியில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காக திராவிடர் கழகம் சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளது. கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது மற்றும் கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது போன்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்க மாலை 5.30 மணிக்கு சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கர்ப்பிணி பெண்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

Categories

Tech |