Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூரியன் சுட்டெரிக்கும் நேரம்…. வட்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்ட மாணவர்கள்…. நடந்த அதிசயம்…!!!

நண்பகல் நேரத்தில் மாணவர்கள் சூரிய ஒளியில் நிற்கும் போது நிழல் விழாததை எண்ணி மிகவும் ஆச்சரியப்பட்டனர்.

சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாள் கொண்டாடப்பட்டது. அதாவது குறிப்பிட்ட  நாளில் நண்பகல் நேரத்தில் சூரியன் நம் தலைக்கு மேலே இருக்கும்போது நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நம்முடைய காலடியில் இருக்கும். இதனால் நிழல் கண்களுக்கு தெரியாது. இந்த நாள் நிழல் இல்லாத நாள் அல்லது பூஜ்ஜிய நாள் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் நிழலில்லா நாளைஅனைவரும் உணர்ந்து கொள்ளும் விதமாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு விஞ்ஞானி லெனின் தலைமை தாங்கினார். இங்கு 11:45 முதல் 12:15 வரை சூரியனின் நிகழ்வுகள் கணக்கிடப்பட்டது. அதன்பின் சரியாக 12:07 மணிக்கு மாணவர்கள் வட்ட வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். அப்போது சூரியன் தலைக்கு மேல் இருந்தாலும் நிழல் பூமியில் தெரியவில்லை. இதைப்பார்த்து மாணவர்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டனர்.

இந்நிலையில் வழக்கமாக சூரிய நம் தலைக்கு மேல் இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏப்ரல் 18 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே சூரியன் சரியாக நம் தலைக்கு மேல் வருகிறது. இந்த 2 நாட்களில் நிழல் பூமியில் விழாது. இந்த இரு தினங்களில் சூரியன் கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் நிற்கும். அதன்பின் துருவப் பகுதி வரை சூரியன் தலைக்கு மேல் வராது. இதனையடுத்து பூமத்திய ரேகையின் வடக்கு அல்லது தென் துருவத்தில் இருந்து சூரியன் இருக்கும் கோணம் சூரியனின் சாய்வு தொலைவு என அழைக்கப்படுகிறது. இது அட்சரேகையின் தொலைவுக்கு சமமாகும் போது சூரியன் சரியாக நிகர உச்சிக்கு வருகிறது. இதனால் உருவாகும் நிழல் சில மணி நேரத்திற்கு அந்த பொருளுக்குள் அடங்கிவிடும். இதன் காரணமாக நிழல் நம் கண்ணுக்குத் தெரியாது.

Categories

Tech |