செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் சீனா தீவிரம் காட்டி வருகிறது.
உலகில் உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் சூரியன் அளவில் மிகப்பெரியது. அதனை ஒப்பிடும்போது பூமி மிக சிறியது. இந்நிலையில் செயற்கையான சூரியனை உருவாக்கும் பணியை சீனா தீவிரப்படுத்தியுள்ளது. இது ஒரு அணு இணைவு கருவி என்று கூறப்படுகின்றது இதன்மூலம் 182 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கமுடியும் என்று கூறப்படுகிறது. 12 செயற்கை சூரியன்களின் சக்திக்கு இந்த ஒரு செயற்கை சூரியன் சமம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கருவிக்கு என HL-2M Tokamak பெயரிடப்பட்டுள்ளது. 1950களில் சோவித் யூனியன் அதிகாரிகள் வழங்கிய தொகாமக் உலையை அடிப்படையாக கொண்டு இந்த கருவி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கருவிக்கு EAST (Experimental Advanced Superconducting Tokamak) அதிகாரப்பூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதல்முறையாக 2006ஆம் ஆண்டு இந்த தொழில் தொழில்நுட்பம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து இயக்குவதற்கு ஏராளமான பணிகள் தேவைப்பட்டது. 2018ஆம் ஆண்டு இந்த கருவியை 180 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையை எட்டியது. குழுவினர் நிர்ணயித்த இலக்கில் இது பாதி மட்டுமே. இந்த ஆண்டு இறுதிக்குள் முழு இலக்கையும் எட்டிவிட வேண்டும் என்பதற்காக தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.