Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தடுத்த இரண்டு படங்கள்… வெளியான மரண மாஸ் தகவல்…!!!

நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ரஜினியின் 169-வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளாராம்.

Is 'Kannum Kannum Kollaiyadithaal' director Desingu Periyasamy all set to  team up with Rajinikanth? | Tamil Movie News - Times of India

இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை நடிகர் தனுஷ் இயக்க இருப்பதாகவும், ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |