சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்காகத்தான் இந்தப் படத்தில் நடித்தேன். இதற்கு எனக்கு காசு வேண்டாம் என சல்மன் கான் கூறியுள்ளார்.
காட்ஃபாதர் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சல்மான் கான் ஒப்பந்தமாகியிருந்தார். நடிகர் சல்மான் கான் இந்த படத்தில் இவர் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சில மாதங்களாக நடைபெற்று வருகின்ற நிலையில் படபிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கின்றது.
இந்நிலையில் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சல்மான்கானுக்கு 20 கோடியை படக்குழு கொடுத்திருக்கின்றது. ஆனால் இதனை வாங்க மறுத்த சல்மான்கான், “சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மீதுள்ள நட்பின் காரணமாகத்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். இதற்கெல்லாம் காசு வேண்டாம்” என கூறியுள்ளார். இச்செய்தியானது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.