பெங்களூர் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனமானது ரோர் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இவற்றில் இடம்பெற்றுள்ள நிரந்தர காந்த மோட்டார் 10kW பீக் அவுட்புட்டையும், 4kW தொடர் அவுட்புட்டையும் தரவுள்ளது. இந்த மோட்டார் சைக்கில் 62Nm டார்க்கை உருவாக்கக்கூடியது ஆகும். சிங்கிள் ஸ்டேஜ் ரெடக்ஷன் கொண்ட பெல்ட் டிரைவ் சிஸ்டம் வாயிலாக பின்பக்க சக்கரத்திற்கு பவரை பரிமாற்றம் செய்யக்கூடிய அடிப்படையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பைக் 3 நொடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 40 கிலோ மீட்டர் வேகத்தினையும், அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வேகத்தினையும் எட்டும் திறனை பெற்றுள்ளது. மேலும் 4.4kWh பிக்ஸ்ட்லித்தியம் அயன்பாஸ்பேட் பேட்டரி பேக்குடன் இடம்பெற்றுள்ளது. இது பிற லித்தியம் அயன் பேட்டரியுடன் அட்வாஸான திறனை கொண்டு உள்ளது. 2 மணி நேரத்தில் முழுதாக இந்த பைக்கை சார்ஜ் பண்ண முடியும். இது 15A பவர் சாக்கெட்டை கொண்டு இருக்கிறது.
இந்த பவர் சாக்கேட்டை கூடுதல் விலை எதுவும் இன்றி வாடிக்கையாளர்களின் வீட்டில் பைக்கில்
எகோ, சிட்டி, ஹாவக் என்ற 3 வகையான ரைடிங் மோட் இருக்கிறது. இம்மூன்று ரைடிங் மோடிலும் 50 கி.மீ, 70 கி.மீ, 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். எகோ வேரியண்டில் அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் தூரம் வரையும், சிட்டி மற்றும் ஹாவோக்கில் 120 கிலோ மீட்டர் மற்றும் 100 கி.மீ தூரம் வரையும் செல்ல முடியும். அத்துடன் இந்த பைக்கில் ஸ்மார்ட் அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.
ப்ளூடூத் கனெக்டிவிட்டியும், மற்ற செயலிகளும் இவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் ட்ரெலில்ஸ் பிரேம், முன் பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க், பின் புறத்தில் மோனோஷாக் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த பக்கில் 17 இன்ச் வீல், டிஸ்க் பிரேக்குடன் வருகிறது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலையானது ரூ.1.25 லட்சமாக இருக்கிறது. மாநிலங்களின் மானியத்துடன் சேர்ந்து ரூபாய் 99,999 வரை இந்த பைக்கை பெற முடியும்.