தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, டாக்டர் கலைஞர் பெயரில் மதுரையில் பல கோடி மதிப்பில் நூலகம் அமைப்பதை அதிமுக சார்பாக வரவேற்கிறோம்.
ஐந்து மாவட்டங்களின் விவசாயத்துக்காக அணை கட்டிய பென்னி குயிக் எங்கு வாழ்ந்தார் என்பதை அரசு தான் தெளிவு படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு அணை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு மக்களுக்காக திட்டங்களை செய்து கொடுக்கிற போது மதுரைக்காரன் என்ற முறையில் இருகரம் கூப்பி வரவேற்க காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.